அடிப்போர் அறிய!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:11-12.
அடிப்பவர் அறிய! 

11  பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.

12  அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். 
கிறித்துவில் வாழ்வு:

செந்நீர் சிந்தும் உழைப்பாளருக்கு, 

சிறியரால் அடியும் விழுவதுண்டு. 

இந்நாட்களிலும் இதுபோல் கண்டு, 

ஏழை ஊழியர் அழுவதுண்டு. 

எந்நாட்டவரும் காணும்படிக்கு, 

இறை தீர்ப்பளிக்க எழுவதுண்டு. 

அந்நாள் அழுது புலம்பாதிருக்க,  

யார்தான் இன்று தொழுவதுண்டு?  

ஆமென்.

Leave a Reply