கட்டவிழ்ந்த நாவுகளே!
இறை வாக்கு: லூக்கா 1:64-66.
64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65 அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
இறைவாழ்வு:
கட்டப்பட்ட நாவுகள் எல்லாம்,
கடவுள் அருளால் திறக்கட்டுமே.
முட்டாள்த்தன்மை முற்றிலும் விட்டு,
மும்மை இறையில் பிறக்கட்டுமே.
எட்டுத்திக்கில் எழும்பும் தீதும்,
இல்லா வண்ணம் இறக்கட்டுமே.
கொட்டவேண்டும் அன்பு மழையே;
குவலயம் தழைத்துச் சிறக்கட்டுமே!
ஆமென்.