காணாக் கண்கள்!
நற்செய்தி: யோவான் 9:39-41.
நல்வழி:
காணாக் கண்கள் கொண்டவனாய்,
கனவில் பறந்தேன், போதுமய்யா.
வீணாம் நினைவின் விளைவுகளால்,
விண்ணை மறந்தேன், தீது அய்யா.
கோணார் நேர்மையில் இனி நடப்பேன்;
கிறித்து பிறப்பால் மாற்றுமையா.
வாணாள் முழுவதும் ஆவியரின்,
வரங்கள் சிறக்க ஊற்றுமையா!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.