ஆண்டுகள் இருபத்து நான்கு கடந்தும்,
ஆண்டவர் சொன்னது வரவில்லை.
வேண்டிக் கேட்ட பிள்ளைப் பேறும்,
விரும்பும் ஆபிராம் பெறவில்லை.
தாண்டிய நாடுகள் பின்பு கிடந்தும்,
தருகின்ற இறையும் தரவில்லை.
ஏன்டா இப்படி, என்றே சொன்னோம்!
இப் பொறுமையிழத்தல் அறமில்லை!
(தொடக்கநூல் 17)