45 ஆண்டுகள் முன்!

45 ஆண்டுகள் முன்!

நாற்பத்தைந்து ஆண்டுகள் முன் 

நம்ப மறுத்த என்னிடத்தில், 

ஏற்க வைத்துத் திருத்திடவே, 

இறையீந்தார் திருமறை.

ஊர் உறவின் கண்கள் முன்,

ஒன்று மற்று இருந்தவனை 

தோற்க விடாது நிறுத்திடவே, 

தொடர்கிறார் அருள் மழை!

-கெர்சோம் செல்லையா.