இழந்து கொடுத்தல்!
நல்வாக்கு; மத்தேயு 27:35
“அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;”
நல்வாழ்வு:
மடைதிறந்த வெள்ளம் போன்று,
மகிழ்ந்தே வழங்கும் மன்னவா,
உடை கொடுத்துத் தொங்கும் உம்மை
உலகும் நோக்கிப் பார்க்காதா?
அடையயியலா மீட்பு வழங்க
ஆடையும் கூட இழந்தவா,
விடைதெரியா அம்மண மனிதர்
விடுதலையடைய உடுத்த, வா!
ஆமென்.