நல்வாக்கு: மத்தேயு 27:6-8.
“தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ‘ இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ‘ என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ‘ இரத்த நிலம் ‘ என இன்றுவரை அழைக்கப்படுகிறது.

“நல்வாழ்வு:
காட்டில் வாழும் விலங்குங்கூட
கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.
கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்
கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.
நாட்டின் நடைமுறை இதுதானென்று
நானுமிருந்தது என் தவறே.
வீட்டில் இதனைக் காணும்போதோ,
விழுந்தழுதேன், என் இறையே!
ஆமென்.
காட்டில் வாழும் விலங்குங்கூட
கூட்டாய் வாழ்ந்து படுத்திடுமே.
கேட்டின் மனிதர் காட்டிக் கொடுத்துக்
கெட்டுப் போகிறார், தடுத்திடுமே.
நாட்டின் நடைமுறை இதுதானென்று
நானுமிருந்தது என் தவறே.
வீட்டில் இதனைக் காணும்போதோ,
விழுந்தழுதேன், என் இறையே!
ஆமென்.