வேறு வேலை தேடி!

வேறு விருப்பம்!

இறை மொழி: யோவான் 21: 1-3.

1. இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது:

2. சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,

3. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

இறை வழி:

வேறு விருப்பு வெகுண்டு எழும்ப,

விண்ணின் விருப்பு பணிகிறது.

ஆறு அடியர் அது போல் தழும்ப,

ஆண்டவர் நெஞ்சும் குனிகிறது.

நூறு வழிகள் நம் முன் மின்ன,

நேர்வழி மீட்புள் நுழைகிறது.

கூறு நண்பா,உன் விருப்பென்ன?

கிறித்தவ வழி விழைகிறது!

ஆமென்.

May be an image of 1 person