வேறுபாடு பாரா இறைவன்!

​வேறுபாடு பாரா இறைவன்!
நற்செய்தி மாலை: மாற்கு 4: 1-4.
“அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: ‘ இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.”
நற்செய்தி மலர்:
வேறுபாடு பாரா இறைவன்
வீதியிலேயும் விதைக்கின்றார்.
நூறு நூறாய் பலன் தரவே,
நொந்த நெஞ்சில் பதைக்கின்றார்.
மாறுபாடு கொண்டோரையும்
மகிழ்விப்பதற்கே உழைக்கின்றார்.
தேறுதல் நாம் வாழ்வில் பெறவே,
தெய்வம் அரசுள் அழைக்கின்றார்!
ஆமென்.

 

Leave a Reply