வாள்!

வாள் !


இறை மொழி! யோவான் 18:10-11.10. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.

11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.

இறை வழி:

வீழ் என்று நினைப்போர் முன்பு, 
விழேன் என்று எதிர்ப்பதற்கு,
வாள் எடுக்கும் மனிதர் உண்டு.
வரலாறு கதை சொல்கிறது.
சூழ் என்று அணைக்கும் அன்பு,
சொல்லும் மீட்பு விதிப்பதற்கு, 
தாள் பணிதல் புனிதர் பண்பு;
தாழ்மை ஆவி வெல்கிறது!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா. Activate to view larger image,

Image preview

Activate to view larger image,