நல்வழி:
பேச்சின் சிறப்பை இயேசுவில் கண்டு,
பிடிக்கப் போனோர் திரும்புகிறார்.
மூச்சாம் அன்பை வாழ்வில் கண்டு,
முடிவை மாற்றி, விரும்புகிறார்.
ஏச்சால் பலபேர் இகழ்தல் கண்டு,
இறைவழி விட்டு திரும்பாதீர்.
நீச்சல் மாறும், நிறைவும் பாரும்;
நெறியிலா வாழ்வை விரும்பாதீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.