யாவரும் வாருங்கள்!

யாவரும் வாருங்கள்!
நற்செய்தி: மத்தேயு 27:57-58.
இயேசுவின் அடக்கம்:
“மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.”
 
நல்வாழ்வு:
சிறியோருக்கு மட்டுந்தான்
சிலுவையில் இயேசு இறந்தாரா?
வறியோர் ஏழை என்பவர்தான்
வந்து அவரைச் சேர்ந்தாரா?
அறியாமையைக் கைவிடுவீர்.
அரிமத் தியாவை எண்ணிடுவீர்.
கிறித்து இறந்தார் யாவருக்கும்;
கீழோர் மேலோர் வந்திடுவீர்!
ஆமென்.
யாவரும் வாருங்கள்!
நற்செய்தி: மத்தேயு 27:57-58.
இயேசுவின் அடக்கம்:
"மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்."
நல்வாழ்வு:
சிறியோருக்கு மட்டுந்தான் 
சிலுவையில் இயேசு இறந்தாரா?
வறியோர் ஏழை என்பவர்தான் 
வந்து அவரைச் சேர்ந்தாரா?
அறியாமையைக் கைவிடுவீர்.
அரிமத் தியாவை எண்ணிடுவீர்.
கிறித்து இறந்தார் யாவருக்கும்;
கீழோர் மேலோர் வந்திடுவீர்!
ஆமென்.

Leave a Reply