மெய்!

மெய் அறிவீர்!நற்செய்தி: யோவான்: 6:45-47.45.

எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

மெய்மை நாடின், மெய்மை காண்பார்;

மேன்மை வாழ்வு பெற்றிடுவார்.

பொய்மை தேடின், பொய்மை காண்பார்;

பொல்லா வழியே கற்றிடுவார்.

தூய்மைப் பண்பே தெய்வம் என்பார்,

திருமகன் ஏசுவில் கண்டிடுவார்.

வாய்மை எங்கே? அங்கே, இறை பார்!

வராதார் அழிவே அண்டிடுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.