மாய்மை வலையில் விழுந்தவரை…..

 

நற்செய்தி மாலை: மாற்கு 1:16-18.

முதல் சீடர்களை அழைத்தல்:
“அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ‘ என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.”

நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித்
தூரம் விலகிய மீனவரை
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான,
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.

நற்செய்தி மாலை: மாற்கு 1:16-18.
முதல் சீடர்களை அழைத்தல்:
"அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்."

நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித் 
தூரம் விலகிய மீனவரை 
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான, 
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மாய்மை வலையில் விழுந்தவரை, 
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.
LikeLike ·  · Share

Leave a Reply