மறுத்தலும் பொறுத்தலும்!
இறை மொழி: யோவான் 18:24-27.
24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.
25. சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.
26. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
27. அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.
இறை வழி:
முன்னாள் இயேசு சொன்னபடியே
மும்முறை பேதுரு மறுத்தார்.
அந்நாள் அதனை அறிந்த இயேசு,
அன்பில் அவரைப் பொறுத்தார்.
இன்னாள் இதுபோல் ஒருவரிருந்தால்,
யார்தான் அவரைச் சேர்ப்பார்?
பொன்னாய் மாறும் நிலை எந்நாளோ?
பொறுப்பீர், இறை ஏற்பார்!
ஆமென்.