பேய்களின் தலைவன்!

​பேய்களின் தலைவன்!
நற்செய்தி மலர்: மாற்கு 3:21-22.
“அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், ‘ இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது ‘ என்றும் ‘ பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் ‘ என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
பேய்களின் தலைவன் என்றும் விளிப்பார்;
பித்தம் பிடித்தோன் என்றும் பழிப்பார்.
வாய்மொழியாலே வறுத்து எடுப்பார்.
வரம்பினைமீறி வன்முறை தொடுப்பார்.
நாய்களைப் போன்று இவரும் குரைப்பார்;
நன்றியை மட்டும் காட்ட மறுப்பார்.
தாயினும் சிறந்த தந்தையின் மகன்தான், 
தாங்கி நம்மை இவரிடம் மீட்பார்!
ஆமென்.

Leave a Reply