புல்லும் வளராப் பாறை!

 

நற்செய்தி மாலை: மாற்கு 4:5-6
“வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.”
நற்செய்தி மலர்:
கல்லும், பாறையும் இருப்பதனாலே,
கடவுளின் வாக்கு புகவில்லை.
நெல்லும், பயிரும் வராததனாலே,
நிலமெனக் கூறவும் வகையில்லை.
 
புல்லும் வளராப் பாறை என்னை,
புனிதா, உடைத்து நிலமாக்கும்.
சொல்லும் ஐயா, அடியன் கேட்பேன்;
சோறு படைக்க நலமாக்கும்!
ஆமென்.

Leave a Reply