பார்ப்பதைப் புரிந்து நம்புவோமே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:28-30.
“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். ‘ ‘ இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது ‘ என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.”
நற்செய்தி மலர்:
நற்செய்தி நாங்கள் கொடுக்கையிலே,
நம்ப மறுக்கும் நண்பர்களே,
அற்புதச் செயல்களின் வடிவினிலே,
ஆண்டவர் வாக்கு ஒலிக்கிறதே!
பொற்பரன் ஆவியர் பணிகளிலே,
புரிவோம் இறைவன் அன்பினையே!
பற்பல விளக்கங்கள் தேவையில்லை;
பார்ப்பதைப் புரிந்து நம்புவமே!
ஆமென்.