படைப்பின் அழகு!
படைப்பின் அழகைப் பார்க்கும்போது,
படைக்கும் இறையைப் பார்ப்போமே.
கிடைக்கும் பொருளைச் சேர்க்கும்போது,
கொடுக்கும் அறிவும் சேர்ப்போமே.
உடைக்கும் நம் வினை தோற்கும் என்று,
உணர மறுப்பின், தோற்போமே.
துடைக்கும் மகனே ஏற்பார் இன்று;
தூய ஆவியில் ஏற்போமே!
-கெர்சோம் செல்லையா.