நேர்மையை இன்னும் பெறுவோமே!
நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
“அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ‘ இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ‘ என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.