நல்வாழ்த்து:
பித்தம் பிடித்து நான் எழுதவில்லை;
பிழைப்பிற்கென்றும் புகழவில்லை.
நித்தமும் உரைப்பது என் கடமை.
நெஞ்சே, புகழ்வாய் உன் இறையை!நல்வாக்கு:மத்தேயு 26:48-50.
“அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, ‘ ரபி வாழ்க ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ‘ தோழா, எதற்காக வந்தாய்? ‘ என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.”

நல்வாழ்வு:
காட்டிக் கொடுக்கும் கயவனையும்
கனிந்து தோழன் என்றாரே.
கூட்டில் குதிக்கும் குருவியெனக்
கொதிக்கும் எனையும் காண்பாரே.
நாட்டின் நடப்பு பார்க்கையிலே
நல்லவர் வடிவில் யூதாசே.
கேட்டின் மக்கள் கெட்டொழிவார்;
கிறித்து போன்று இரு நெஞ்சே!
ஆமென்.