நானே அவர்!
இறை மொழி: யோவான் 18: 6-9.
6. நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
7. அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
இறை வழி:
தானே வந்து முன்னால் நிற்கும்,
தலைவன் துணிவை பாருங்கள்.
நானே அவர் என்பதைக் கூறும்,
நல்லிறைப் பண்பும் பாருங்கள்.
வீணே என்று விட்டு விட்டோடும்,
வீம்புத் தலைகளும் பாருங்கள்.
ஏனோ தானோ எனும் வழியல்ல;
இறையேசு பாதை சேருங்கள்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.