நல்வாக்கு

வாழவைக்கும் வாக்கு!

 நல்வாழ்த்து:
அறிய இயலா இறைவனே,
அறிந்திட உம்மை வாழ்த்துகிறேன்.
சிறிய குழந்தைபோல் நானே
சீர்பட என்னைத் தாழ்த்துகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:44-46.
“அதற்கு அவர்கள், ‘ ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்? ‘ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘ மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். ” 
நல்வாழ்வு:
இல்லார் வடிவில் இறைவன் வருவார்;
நல்லார் அறிந்து நன்மை செய்வார்.
கல்லார் அறியார், கடவுளை மறுப்பார்;
பொல்லாராகிப் போக்கிடம் இழப்பார்!
ஆமென்.

Leave a Reply