நற்செய்தி

நற்செய்தியால் நம்மைத் திருத்துவோமா?

நல்வாழ்த்து:
கொடுக்கும்போது புகழ்கின்றேன்.
எடுத்தபின் ஏனோ மறக்கின்றேன்.
தொடுத்து இறையைப் புகழ்வதற்குத்
தூய்மை வேண்டி நிற்கின்றேன்!
நல்வாக்கு: மத்தேயு 25:34-36.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘ என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ‘ என்பார்.” 
நல்வாழ்வு:
கிறித்தவக் கூட்டத்து பெருமக்களே,
கிறித்துவின் வாக்கைக் கேளுங்களே.
வெறித்தனக் கொள்கைகள் விட்டுவிட்டு,
வெளியே வந்து உதவுங்களே.
பொறிதனில் விழுந்த எலியினைப்போல்
புரியா ஏழையர் ஏங்குகின்றார்.
அறிவின் பாதையில் அவர் வருவார்;
அன்புடன் உதவி செய்யுங்களே!
ஆமென்.

Leave a Reply