நற்செய்தி மாலை.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ‘ என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.”

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம்
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:

"கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்."

நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம் 
நல்வழி திரும்பச் சொல்கிறதே.

ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

Leave a Reply