நம்புவோம் நற்செய்தியை

இறைமகன் வாக்கைக் கேட்போமா?
இனிய வாழ்வைப் பெறுவோமா?
நல்வாழ்த்து:
பார்வை அற்றோர் பார்த்திட வேண்டும்;
படைத்தவர் வாக்கை ஓதுகிறேன்.
நேர்மை பெற்று நிமிர்ந்திட வேண்டும்;
நெருப்புக் கனலை ஊதுகிறேன்.
கோர்வையாக்கிக் கொடுத்திட அறியேன்.
குறைகள் உண்டு, வாடுகிறேன்.
ஆர்வம் கொண்டு செய்யும் தொண்டு;
ஆண்டவர்க்கென்று  பாடுகிறேன்!
நல்வாக்கு: மத்தேயு 26:1-2.
இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும்.
இயேசுவைக் கொல்ல சதித்திட்டம்.
“இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம், ‘ பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார் ‘ என்றார்.”
நல்வாழ்வு:
பழுதிலா ஆட்டைப் பலியாய் வெட்டிப்
பாவம் போக்கினார் அன்று.
தொழுதிடும் அடியார் தூய்மையாவார்,
தெய்வப் பலியில் இன்று!
அழுது புலம்பும் நிலையை விட்டு,
ஆண்டவர் வழியை நம்பு.
எழுதிய வாக்கை ஏற்பவருக்கு,
இயேசு தருவார் மீட்பு!
ஆமென்.

Leave a Reply