யோவான் 7: 40-43.
நல்வழி:
என்ன எதுவென அறியார் இன்று,
எழுந்து திரை முன் பேசுகிறார்.
சொன்ன சொல்லின் ஆழம் சென்று,
சோதிக்காமல், ஏசுகிறார்.
இன்ன வகையில் இருத்தல் அன்று;
ஏசுவின் அடியார் தேடுகிறார். \
பின்னல் சிக்கு பிரித்தல் நன்று.
பேறு பெற்றோர் பாடுகிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.