நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.
“அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.”
நற்செய்தி மலர்:
வாக்கிலும் சொல்லிலும் வல்லவரே,
வாழ்விலும் நீர்தான் நல்லவரே.
ஆக்கிடும் செயல்கள் யாவிலுமே,
ஆளுமை உமதே, ஆண்டவரே.
போக்கிட மில்லா எழையரே,
பொய்மையில் கிடப்பது புரியலையே.
தூக்கிட வலுவாம் வாக்கினையே,
தூயா, எமக்கும் ஈந்திடுமே!
ஆமென்.