செயல்படாத நல்லெண்ணம்!

விருப்பமுண்டு, ஆனால்!

இறை மொழி: யோவான் 19:12-13.

12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

இறை வழி:

அன்றைய பிலாத்து ஆளுநர் போன்று,

அவதிப்படும் பல மனமுண்டு

கொன்றிடத் துடிக்கும் கூட்டம் சென்று,

கொடுக்க மறுக்கும் கனவுண்டு.

சிந்தையில் மட்டும் நினைப்பது அன்று;

செய்யாதிருந்தால் கடனுண்டு.

நன்மை எண்ணி நடத்திடு நன்று;

நல்லிறை, உன் உடனுண்டு!

ஆமென்.

May be an image of text that says 'THOSE WHO DO GOOD DEEDS WILL RISE TO A RESURRECTION OF... Life te John 5:29 Knowing-Jesus.com'