சுமந்து வந்தவர் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 2:3-5.
“அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘ மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சுமந்து வந்தவர் பற்றினைக்கொண்டு
சுமையாய் வந்தவர் எழும்பியதுண்டு.
உமது பார்வையின் ஆழம் கொண்டு,
உயிர் வாழ்கின்றோம் உம்மைக் கண்டு.
எமது நடுவிலும் நோய்கள் கொண்டு,
எழும்ப இயலாதவர்கள் உண்டு.
அமர்ந்து கேட்கும் அடியவர் கண்டு,
அதிசயம் செய்யும் அன்பைக்கொண்டு!
ஆமென்.