கொலை வெறி!
இறை மொழி: யோவான் 16:1-3.
1. நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
2. அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.
இறை வழி:
வன் முறையாலே வென்றிட வெடிப்பார்,
வளராப் பிஞ்சு போலவே பழுப்பார்.
தன் வெறியாலே கொன்றிடத் துடிப்பார்,
தப்புவதற்கு இறையும் இழுப்பார்.
நன்னிலப் பரப்பில் இறை என்ன வடிப்பார்?
நன்மை தரவே நம்மை அழைப்பார்.
இன்னிலை அறிவார், அன்புதான் பிடிப்பார்.
யாவரும் வாழத்தான் உழைப்பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.