கொலை வெறி!

கொல்லத் துடிக்கும் வெறி!

இறை மொழி: யோவான் 19:6-9.

6. பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.

7. யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.

8. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,

9. மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

இறை வழி:

கொல்லத் துடிக்கும் வெறியுண்டு;

கொலைக்கோ ஏது எதுவுமில்லை.

சொல்லும் வாயில் பொய்யுண்டு;

சொற்கேட்பவரோ பொதுவில்லை.

நல்லறிவென்பதில் அன்புண்டு.

நம்மில் பலரோ கற்கவில்லை.

மெல்லுரையாயினும் நெறியுண்டு.

மேலோர் வழியது, தோற்பதில்லை!

ஆமென்.

May be an image of text that says 'JESUS: SON OF GOD? Can Jesus be both God and man?'