கேட்பாயா தமிழா?
பாண்டியனாண்டான்; சோழன் மாண்டான்.
சோழன் எழுந்து, பகைமை தீர்த்தான்.
ஆண்டான் இப்படி அழித்ததினாலே,
அறம் பொருள் இன்பம் தமிழனிழந்தான்.
மீண்டும் சக்கரம் சுழல்வதைத் தடுப்பீர்;
மேலோன் கீழோன் எண்ணம் விடுப்பீர்;
கூண்டாய், கொத்தாய் அழியாதிருக்கக்
கூடிவாழக் கற்று நடப்பீர்!
