கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்!

நல்வாக்கு: மத்தேயு 27:39-44.

“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ‘ பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘ நான் இறைமகன் ‘ என்றானே! ‘ என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று,
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.

கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்!

நல்வாக்கு: மத்தேயு 27:39-44.
"அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ' கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா ' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், ' பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ' நான் இறைமகன் ' என்றானே! ' என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்."
நல்வாழ்வு:
இயேசுவை இகழும் ஏளனக் கூட்டம்
எண்ணிக்கையைக் கூட்டிடுதே.
காசும் பொருளும் தெய்வம் என்று, 
காலத்தை வீணாய்க் கழித்திடுதே.
தூசும் ஒருநாள் சான்றினைக் கூறும்;
துன்பம் தொலைய வகுத்திடுமே.
பேசும் இறைவன் வாக்கினைக் கேட்டு,
பேரின்பத்தைப் பெருக்கிடுமே!
ஆமென்.

Leave a Reply