கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!

கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!
இறைவாக்கு: மத்தேயு 28:1-6.
இயேசு உயிர் பெற்று எழுதல்:
“ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ‘ நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.”
இறைவாழ்வு:
அடைத்த கல் புரண்டிருக்க,
அதிலொருவன் அமர்ந்திருக்க,
கிடைத்த செய்தி மகிழ்ச்சி,
கிறித்து உயிர்த்த நிகழ்ச்சி.
படைத்தளங்கள் அலறிவிழ,
பகைவரெல்லாம் அடிபணிய,
உடைத்துவரும் வெள்ளமென,
உயிர்த்தார், அவர்க்கே புகழ்ச்சி!
ஆமென்.
Photo: கிடைத்த செய்தி, மகிழ்ச்சி!
இறைவாக்கு: மத்தேயு 28:1-6.
இயேசு உயிர் பெற்று எழுதல்:
"ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்."
இறைவாழ்வு:
அடைத்த கல் புரண்டிருக்க,
அதிலொருவன் அமர்ந்திருக்க,
கிடைத்த செய்தி மகிழ்ச்சி,
கிறித்து உயிர்த்த நிகழ்ச்சி.
படைத்தளங்கள் அலறிவிழ,
பகைவரெல்லாம் அடிபணிய,
உடைத்துவரும் வெள்ளமென,
உயிர்த்தார், அவர்க்கே புகழ்ச்சி!
ஆமென்.

Leave a Reply