காட்டிக் கொடுத்த யூதாசும்…

காட்டிக் கொடுத்த யூதாசும்…

நற்செய்தி மாலை: மாற்கு 3:16-19.
“அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.”
நற்செய்தி மலர்:
காட்டிக் கொடுத்த யூதாசும் 
கடவுள் பணிக்கு வந்தவனே.
வீட்டைத் துறந்து உழைப்பதற்கு,
விரும்பி தன்னைத் தந்தவனே.
நோட்டம் காசில் வைத்ததினால்,
நேர்மை இழந்து போனானே.
வேட்டைக்கார ஊழியர்போல்,
கேட்டின் மகன் ஆனானே!
ஆமென்.

Leave a Reply