ஒளி!

ஒளி!

நற்செய்தி: யோவான் 8:12. 

12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.  

நல்வழி:

ஒருவரும் சேரக் கூடா ஒளியாய்,

ஒளிர்கிற தெய்வம் இயேசு. 

திருவருள் தருகிற, தேடா வழியாய்,

தெரிகிற மனிதனும் இயேசு.

இருளாய் இருந்த எனது வாழ்வில்,

ஒளியாய் வருபவர் இயேசு. 

பொருளால் அல்ல, தனது உயிரால்,

புனிதம் தருபவர் இயேசு!


 ஆமென். 

-கெர்சோம் செல்லையா.