ஒருவரைக் கொன்று..
இறை மொழி: யோவான் 18:12-14.
12. அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
13. முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.
14. ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
இறை வழி:
ஒருவரைக் கொன்று ஊரைக் காப்பதும்,
ஊரை அழித்து நாட்டை மீட்பதும்,
பெருமதி பெறாத பேதையர் கருத்து;
பிழை உணர்ந்து உள்ளம் திருத்து.
இருவரோ மூவரோ எண்ணிக்கை அல்ல;
யாவரைக் காப்பதே இறையின் நல்ல,
விருப்பெனக் கண்டு பணிவாய் இன்று;
விண் அருளில் வாழ்வோம் நன்று!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.