வாக்கு: யோவான் 10:5-6.
வாழ்வு:
ஆட்டின் அறிவு ஐந்தேயாயினும்,
ஆயன் யாரென அது அறியும்.
வீட்டின் காவல் நாய்களாயினும்,
வெளியாட்களை இனம் புரியும்.
நாட்டின் மக்கள் நிலையைப் பாரும்;
நன்மை தீமை பகுத்தறியும்.
கேட்டின் விளைவுகள் எண்ணாவிட்டால்,
கெட்ட பின்புதான் புரியும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.