எழுந்தவரைக் காண்பீர்கள்!

எழுந்தவரைக் காண்பீர்கள்!
நல்வாக்கு: மத்தேயு 28:7
“நீங்கள் விரைந்து சென்று, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ‘ என்றார்.’
நல்வாழ்வு:
எழுந்தவரைக் காண்பீர்கள்;
இனியோரே பாருங்கள்.
அழுந்தும் சுமை நீங்கும்;
ஆண்டவருள் வாருங்கள்.
விழுந்தவர்கள் எழுந்தின்று
வெற்றி கொள்வதுபோல்,
தொழுதுள்ளில் பெறுவீர்கள்;
தூயவரைச் சேருங்கள்!
ஆமென்.

Leave a Reply