எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 3:3-4.
“இயேசு கை சூம்பிவரை நோக்கி, ‘ எழுந்து, நடுவே நில்லும் ‘ என்றார். பின்பு அவர்களிடம், ‘ ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை? ‘ என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
விதை விதைத்து விளைச்சல் அறுப்போம்.
வீணாய் வினைகள் விதைத்தல் வெறுப்போம்.
கதை வழியாய் உண்மைகள் கேட்போம்;
கருத்தை இழந்தவர் முடிவும் காண்போம்.
எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
என்றே எண்ணி நன்மை செய்வோம்.
இதை உரைக்கும் எளியவன் இவனும்,
எழுதிச் செல்லாதிருக்க வைப்போம்!
ஆமென்.