இயேசுவின் உயிர்த்தெழுதல்!
பிறப்பின் முடிவு இறப்பு என்று
பேசுகின்ற மாந்தர் முன்,
இறப்பின் பின்பு வாழ்வு உண்டு,
என்கிறார் ஏசு உயிர்த்து.
திறப்பின் வாசல் இதுவே என்று,
தேடுவார்க்கு அவர் பின்,
சிறப்பு வாழ்வு ஒன்று உண்டு;
சேர்வோம் நாம் உயிர்த்து!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.