உண்ண மறந்த ஊழியர்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:20.
“அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.”
நற்செய்தி மாலை:
உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்,
ஊணினை மறந்து உழைப்பவர் யார்?
விண்ணையும் துறந்து, வீதியில் வந்து,
விருந்து படைக்கும் மறைமகனார்.
பண்பிலார் நடுவில் வாழும் நம்மை,
பரிவாய் விருந்திற்கழைப்பவர் யார்?
எண்ணிட இயலா வகைகளில் ஈந்து,
என்றும் தந்திடும் இறைமகனார்!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 3:20.
“அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.”
நற்செய்தி மாலை:
உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்,
ஊணினை மறந்து உழைப்பவர் யார்?
விண்ணையும் துறந்து, வீதியில் வந்து,
விருந்து படைக்கும் மறைமகனார்.
பண்பிலார் நடுவில் வாழும் நம்மை,
பரிவாய் விருந்திற்கழைப்பவர் யார்?
எண்ணிட இயலா வகைகளில் ஈந்து,
என்றும் தந்திடும் இறைமகனார்!
ஆமென்.