இறை அதிசயம்!
வாக்கு: யோவான் 10:41-42.
வாழ்வு:
அருட்பணி ஆயிரம் புரிந்தாலும்,
அன்பில் சேர்ந்து திரிந்தாலும்,
விருப்புடன் மனிதர்கள் தேடுவது,
விதியை மாற்றும் அதிசயமே!
திருப்பணித் தளங்களில் காணுகிற,
தேய்ந்தோர் நலத்தைப் பேணுகிற
பெருந்திரள் கூட்ட அருஞ்செயல்கள்,
புரிவாய், இறை அதிசயமே!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.