இறைவாக்கு இனிய வாக்கு!

இனிய வாக்கு இறைவனின் வாக்கு!

நல்வாழ்த்து:
எள்ளி நகையாடும்
எதிரி முன்னிலையில்
எனக்கு அச்சமில்லை;
என்னேசு என்னுடனே.
தள்ளி விடும் மாந்தர்
தவறாய் நோக்குகையில்,
தாழ்ச்சி அடைவதில்லை;
தலைவனைப் போற்றினேனே!
நல்வாக்கு: மத்தேயு 25:41-43.
“பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘ சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ‘ என்பார்.”
 
நல்வாழ்வு:
பசிக்கு உணவளிப்போம்;
பருகிட நீர் கொடுப்போம்.
வசிக்க இடம் தருவோம்;
வாழ வழியுரைப்போம்.
புசிக்கும் ஏழையரின்
புன்னகை நெஞ்சந்தான்,
ருசிக்கும் இறையன்பு;
என்றும் நினைந்திடுவோம்!
ஆமென்.

Leave a Reply