இறைவன் பேசுகிறார்!

மா இறை பேசுகிறார்!

இறைவாக்கு: யோவான் 12: 29-30. 

இறைவாழ்வு:

இடி, மின்னல், காற்று என்னும் 

இயற்கை வழியாய்ப் பேசுகிறார்.

பிடி படாமல் ஓடுவார் பின்னும்,

பிள்ளைகள் என்றே பேசுகிறார். 

தடி எடுத்து, தாக்குவார் கண்டும்,

தவறை உணர்த்தப் பேசுகிறார்.

மடி மீது அணைத்துக் கொண்டும்,

மா இறை அன்பாய்ப் பேசுகிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.