இறைவனின் மக்கள்

​நற்செய்தி மாலை: மாற்கு 3: 32-35

“அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ‘ அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ‘ என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ‘ என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ‘ இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
குறைகள் கூறும் குடும்பத்தவர்கள் 
கூட இருந்து கெடுத்திடுவார்கள்.
சிறைபோல் வாழ்வை மாற்றியமைத்துச் 
செய்யும் நன்மையைத் தடுத்திடுவார்கள்.
இறைவன் விருப்பை விரும்புபவர்கள்,
இறைவனின் மக்கள் என்றாவார்கள்.
உறவுகளாகி, நன்மை செய்து,
ஒழுகும் அருளில் நன்றாவார்கள்!
ஆமென்.

Leave a Reply