செய்யுட் செய்தி!
இறைவாக்கு: மத்தேயு 26:73-75.
“சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, ‘ உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது ‘ என்று கூறினார்கள். அப்பொழுது அவர், ‘ இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இறைவேண்டல்:
மும்முறை மறுதலித்த,
முதல்வர் பேதுருபோல்,
எம்முறை என்றறியேன்,
என்வாயும் பேசிடுதே!
அம்முறை உணர்ந்தழுத
அடியாரின் நெஞ்சைப்போல்,
இம்முறை நான் திரும்ப,
என்னைப் பார்த்திடுமே!
ஆமென்.

