இன்றைய நற்செய்தி!

நற்செய்தி கேட்பது நற்பேறு;

நாமும் பெறுவோம் இப்பேறு!

நல்வாழ்த்து:

அறிவேயில்லா அடியேனை
அழைத்துக் கொடுப்பது உம் அருளே.
வறியோனாக வீழ்த்தாமல்
வாழ வைப்பதும்  உம் பொருளே.
நெறியே இல்லா இவ்வுலகில்
நிம்மதி தருவது உம் வழியே.
கிறித்தோனாக வாழ்ந்து நிதம்
கிறித்துவைப் புகழ்வது என்பணியே!
நல்வாக்கு:
மத்தேயு/ Matthew 24:26-28.
“ஆகையால் எவராவது உங்களிடம் வந்து, ‘ அதோ, பாலைநிலத்தில் இருக்கிறார் ‘ என்றால் அங்கே போகாதீர்கள்; ‘ இதோ, உள்ளறையில் இருக்கிறார் ‘ என்றால் நம்பாதீர்கள். ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.”
நல்வாழ்வு:
காட்டிலென்பார், அறை வீட்டிலென்பார்;
கடவுளின் மைந்தனே தாமென்பார்.
ஏட்டில் இறைவன் எழுதியதை
எண்ண மறந்தால் ஏய்த்திடுவார்.
கேட்டில் விழாது நிற்பவர் யார்?
கிறித்துவுக்குள் வாழ்பவரார்.
வேட்டு வைக்கும் கொடியவரால்
விரிக்கும் வலைக்குத் தப்பிடுவார்!
ஆமென்.

Leave a Reply