இணைக்கும் ஆவியர்!

​நற்செய்தி மாலை: மாற்கு 3:23-25.

“ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: ‘ சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.”
நற்செய்தி மலர்:
பிணக்கம், பிரிவு, பிளவுகளெல்லாம்
பிசாசின் வேலை, புரிந்திடுவீரே.
இணக்கம், உறவு, சேர்த்தலெல்லாம்
இறையின் பணியாம், தெரிந்திடுவீரே.
மணக்கும் கிறித்தவ பணிகளிலெல்லாம்
மனிதரை இணைப்பவர் ஆவியராமே.
உணர்ந்தால் நன்மை; இதுவே உண்மை;
ஒற்றுமை வெறுப்பின் பாவியராமே!
ஆமென்.

Leave a Reply